கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாதிரியார் சம்பத், வெளிநாட்டில் அறிமுகமான ஒருவரின் 6 மற்றும் 12 வயதுடைய இரு மகன்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது. சிறுவர்கள் தாயிடம் தெரிவித்ததை அடுத்து, வடகரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, பாதிரியார் சம்பத்தை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அவர் பெங்களூருவில் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.




