
சிறுவர்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்தலாம்…சீனாவில் புதிய கட்டுப்பாடு..!!
சீனா நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட் போன் இணையம் பயன்படுத்தும் நேரத்தை சீன அரசு நிர்ணயித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சீனாவின் சைபர்ஸ்பேஸ் என்ற அமைச்சகம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் புதிய விளையாட்டுகளை வெளியிட்டுள்ளது.
அதில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இணைய சேவைகளை பயன்படுத்த முடியாது. ஒரு நாளைக்கு 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தை பெற முடியும். இதைப் போலவே 8 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 40 நிமிடங்கள் மட்டுமே இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் சீன அரசு அறிவித்துள்ளது.
குழந்தைகளின் உடல் மற்றும் மனநலத்துக்கு ஏற்றவையாக கருதப்படும் செயலிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த செயலிகள் குறித்த தகவல்கள் சீன சைபர்ஸ்பேஸ் அமைச்சகம் வெளியிடவில்லை. இணையதளத்திற்கு எல்லா தலைமுறையினரும் அடிமையாகாமல் அதிலிருந்து காப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்வதாக சீன அரசு தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கான ஆன்லைன் கட்டுப்பாடுகளை கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே சீன அரசு கடுமையாக்கி வருகின்றது.
இக்கட்டுப்பாட்டுக்குப் பிறகு இணையதளத்திற்கு அடிமையாவது குறைந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய நேர கட்டுப்பாடுகள் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்த விவரம் எதுவும் சீன அரசு குறிப்பிடவில்லை.