
செங்கல்பட்டு ஓமலூர் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனியே வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அவர்களுது குழந்தைகள் தந்தையிடம் வளர்ந்து வந்துள்ளது குறிப்படத்தக்கது.
இந்த நிலையில் நேற்று குழந்தைகள் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில், குழந்தைகளின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து போலீசார் அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த குழந்தைகளின் தாயே குழந்தைகளை கார் வைத்து கடத்தி சென்றது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் அந்த குழந்தைகளின் தாய் அவர்களது நண்பர்களை வைத்து காரில் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.