தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே, சிலம்பம் பயிற்சி ஆசிரியர் பெரிய அப்பணசாமி, 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அவரை வீட்டிற்கு அழைத்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலின்பேரில், விளாத்திகுளம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பெரிய அப்பணசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




