
- சில்லி ஃப்ரைட் பொட்டெட்டோ
தேவையானவை :
உருளைக்கிழங்கு – 2
மைதா – 1 ஸ்பூன்
கார்ன்ப்ளார் – 1 ஸ்பூன்
ரெட் சில்லி பேஸ்ட் – 1 ஸ்பூன்
முட்டை – 1
ஸ்ப்ரிங் ஆனியன் – சிறிதளவு
உப்பு
எண்ணெய் – தேவைகேற்ப
பூண்டு – 1 ஸ்பூன்
வெள்ளை மிளகு – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
சோயா சாஸ்- 1 ஸ்பூன்
இஞ்சி – 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
குடைமிளகாய் – 1
செய்முறை :
1.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்நிறமாக வெந்ததும், குடைமிளகாய், வெள்ளை மிளகு, உப்பு, ரெட் சில்லி பேஸ்ட், சோயா சாஸ், 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கிளறவும்.
2.உருளைக்கிழங்கை சிறு சிறு சீவல்களாக அரிந்துகொள்ளவும். அதனுடன் மைதா,கார்ன்ப்ளார் மாவு, உப்பு, முட்டை சேர்த்து பிசறி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
3.மசாலா வெந்ததும் பொரித்த உருளைக்கிழங்கு, ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து கிளறி பரிமாறவும்.