
அன்று மாலை மணமக்களை மணப்பெண்ணின் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் சம்பிரதாயத்திற்காக கல்யாண் அறைக்குச் சென்று அவனை அழைக்க அவனும் மறுத்து விட்டான். இங்க பாருங்க அம்மா உங்க சந்தோஷத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இதுக்கு மேல அந்த சம்பிரதாயம் இந்த சம்பிரதாயம்ன்னு என்னை டார்ச்சர் பண்ணாதீங்க என்னால ஒரு குடிசைல எல்லாம் போய் தங்க முடியாது….
ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கணும் அப்படிங்குறதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மத்தபடி எனக்கு எந்த விருப்பமும் இல்ல. ப்ளீஸ் எனக்கு ஒர்க் இருக்கு வெளிய போங்க என்றான். அவன் அப்படி சொன்னதற்குப் பிறகு மீண்டும் அவனை அழைக்க முடியாது.அதற்கு மேல் வா என்று கூப்பிட்டால் அவன் ருத்ரதாண்டவம் ஆடிவிடுவான் அந்த வீடு தாங்காது வந்திருக்கும் உறவுக்காரர்கள் முன்னாடி அவமானப்பட்டு தான் நிற்க்க வேண்டும்.
அதனால் சரி என்று வேலாயுதமும் வசந்தியும் கீழே சென்று இரு மணமக்களை மட்டும் அவர்களுடன் அனுப்பி வைக்க காவேரிக்கு தான் ஏமாற்றமாக இருந்தது.
சிறிது நேரம் கழித்து காவேரியை வசந்தி பார்க்கும் போது ஒரு அறைக்குள் சென்று தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். பாவம் சின்ன பொண்ணு மனசெல்லாம் ஏக்கத்தோடு அம்மா வீட்டிற்கு தானும் தன் கணவனோடு போவோம் என்று நினைத்திருந்த வேளையில் அக்காமார்கள் இருவரும் அவளைக் கண்டு கொள்ளாமல் சென்றதும்,அது மட்டும் இல்லாது தாலி கட்டிய புருஷன் அவளை கண்டு கொள்ளாமல் அவன் அறைக்குள் புகுந்து கொண்டதும் அவளுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.
அவளை பார்த்த வசந்திக்கு மனம் கேட்காமல் மீண்டும் தன் கணவனிடம் சொல்ல இப்போது வேலாயுதம் தன் மகனிடம் பேசுவதற்காக அவன் அறைக்கு சென்றார்.
சிறிது நேரத்திற்கு பிறகு எப்படியோ ஒரு வழியாக அவனை சமாதானப்படுத்தி சம்மதிக்க வைக்க மீண்டும் கல்யாண் தன் உடைகளை மாற்றிக் கொண்டு பட்டு வேட்டி சட்டையில் கீழே வந்தான்.நான் கார்ல வெயிட் பண்றேன். அவளை வர சொல்லுங்க”” என்று சொல்லிவிட்டு காருக்கு கல்யாண் சொல்ல வசந்தி காவேரியை அழைத்து வந்து காரில் ஏற்றி விட்டு.சரிம்மா பார்த்து போயிட்டு வாங்க இன்னைக்கு நைட்டு நீங்க அங்க தான் தங்கணும் என்று சொல்லிவிட்டு இந்த பக்கம் வந்து கல்யாணிடமும் இன்னைக்கு ஒரு நாள் எப்படியாவது பொறுத்துக்கோ கல்யாண் எங்களுக்காக என்று சொல்லிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தனர்…!!