சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான மின்னொளி மகளிர் கபடி போட்டியை நேற்று (ஆக.30) அமைச்சர்கள் பெரியகருப்பன், மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு, ராஜஸ்தான், ஹரியான உள்பட 12 மாநிலங்களைச் சேர்ந்த 21 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளன. முதல் நாள் போட்டியில் பஞ்சாப் மற்றும் மங்களூர் அணிகள் வெற்றிப் பெற்றன. தொடர்ந்து, போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறுகின்றன.