சிவகாசி பட்டாசு ஆலை விபத்து..!! “காரணம் இதுவே” – அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, திருத்தங்கல்,செங்கமலப்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டதில் ஆலைக்குள் பணிபுரிந்து வந்த 10 பேர் பரிதாபமாய் உயிர் இழந்துள்ளனர். 11 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோர் தங்களின் இரங்கலையும் பதிவு செய்துள்ளனர்.அமைச்சர் இராமச்சந்திரனும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நேற்று மாலை வெடி விபத்தில் காயமடைந்தோரின் உடல் பிரேத பரிசோதனை நிறைவு பெற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன், “தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இரண்டு நாட்கள் இழப்பீடு அறிவிக்கப்படும், முதல்வர் அதற்கான அறிவிப்பினை வெளியிடவார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான உதவிகள் மாவட்ட நிர்வாகத்தால் கவனிக்கப்படும். இந்த விபத்துக்கு பேராசை மட்டுமே காரணம். பட்டாசு ஆலைக்கான விபத்துகளை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது. இனி விதியை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று கூறியுள்ளார்.

Read Previous

தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது சோகம்..!! முதியவர் கார் மோதி பரிதாப பலி.!!

Read Next

அரசியல் தமிழகம் இந்தியா உலகம் வீடியோ சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் வெப் ஸ்டோரீஸ் Search… கொள்ளை சம்பவத்தில் தொழிலதிபர் மரணம்..!! குற்றவாளியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய காவல்துறை.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular