
சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை தயாரிப்பதாக கூறிவிட்டு பின்னர் முடிவை மாற்றியதற்காக, பாலிவுட் நடிகர் அமீர் கான் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபத்தில் இது குறித்து பேசிய அவர், ‘லால் சிங் சத்தா படம் தோல்வியடைந்த நேரத்தில், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தயாரிப்பதாக கூறினேன். பின்னர் அப்படத்தில் நானே நடிக்கிறேன் என கூறியபோதும், சிவகார்த்திகேயன் பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டார். அவரால் நடிக்க முடியாமல் போனதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.