சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதே தினத்தில் வெளியாகும் இன்னொரு பிரபல நடிகரின் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று இரண்டு அல்லது மூன்று பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படத்தோடு ஜெயம் ரவியின் ’பிரதர்’ திரைப்படம் வெளியாகியுள்ளதாக சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜெயம் ரவியின் ’பிரதர்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ ஆகிய இரு திரைப்படங்களும் தீபாவளி அன்று மோத உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரஜினியின் ’வேட்டையன்’ மற்றும் அஜித்தின் ’விடாமுயற்சி’ உள்பட சில படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘அமரன்’ மற்றும் ’பிரதர்’ படத்துடன் வேறு சில படங்கள் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்பிரமணியம், வி டிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை எம் ராஜேஷ் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#BrotherFromDiwali pic.twitter.com/asVOt3IlCq
— Jayam Ravi (@actor_jayamravi) August 3, 2024