
தினசரி சமையலில் காரத்திற்காக பச்சை மிளகாய் சிவப்பு மிளகாய் குடைமிளகாய், மிளகு போன்றவற்றை சேர்க்கிறோம். இவை அனைத்துமே தனித்துவமான நன்மைகள் மற்றும் சாத்தியமான பக்க விளைவுகளை கொண்டுள்ளனர் அவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்…
சிவப்பு மிளகாய் பயன்பாடு : பருப்புகள் சூடான சாஸ்கள் சூப்புகள் போன்ற உணவுகளுக்கு காரத்திற்காக சிவப்பு மிளகாய் பயன்படுத்தப்படுகிறது. இறைச்சி வகைகளில் ருசிக்காக காரத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது ஊறுகாய் போன்ற செயல்முறைகளுக்கு சிவப்பு மிளகாய் பொடி சேர்க்கப்படுகிறது..
பச்சை மிளகாய் பயன்பாடு : புதியவை சாலடுகள் சீனம் அல்லது தாய் உணவு போன்றவற்றில் அதிகமாக சேர்க்கப்படுகிறது வருத்த உணவுகள் பயன்படுத்தப்படுகிறது. சட்னி வகைகள், கீரை கடைசல், மசியல், சீஸ் கலவைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது..
பச்சை மிளகாயில் விட்டமின் ஏ சி இ ஆகியவற்றுடன் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சர்வ ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மேலும் பச்சை மிளகாயில் காப்சைஸின் என்கிற பொருள் உள்ளது இது வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கும் இதனால் எடை நன்றாக கட்டுக்குள் இருக்கும். இதை அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு வலி இருக்கும் சிலருக்கு தோல் எரிச்சல் இரைப்பை அலர்ஜி புண்புகள் போன்றவை ஏற்படலாம்..
கருப்பு மிளகு : சூப்புகள் சாஸ்கள் இறைச்சி வகைகள் முட்டை பொரியல் ஆம்லெட்டுகள் மிளகுத்தூள் சேர்க்கப்படுகிறது ரசம் வெண்பொங்கல் மற்றும் காய்கறிகளுக்கு மிளகுத்தூள் பயன்படுத்துகிறார்கள்..
குடைமிளகாய் : சாலடுகளில் பச்சையாக பயன்படுத்தப்படுகிறது காய்கறிகள் வதக்கும்போது இவற்றை சேர்க்கலாம் பிரைடு ரைஸ் சிக்கன் ரைஸ் போன்றவற்றிலும் சேர்க்கப்படுகிறது..
ஊட்டச்சத்துக்கள் இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன விட்டமின் ஏ சி மற்றும் k1 அதிகம் உள்ளது. புற்றுநோய் மற்றும் இருதய பிரச்சனை போன்ற நோயிலிருந்து பாதுகாக்க கூடியது. பல்வேறு ஆக்சிடனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது இதில் உள்ள குறைந்த கலோரி உள்ளடக்கம் காரணமாக எடை மேலாண்மைக்கு ஏற்றது..
சில நபர்களுக்கு இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் செரிமான கோளாறு ஏற்படும். அரிதாக சிலருக்கு ஒவ்வாமை எதிர் வினை ஆற்றும்..!!