
சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும்
அருள்புரிவாள்..
ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியான சிவபெருமானுக்குரிய பெரு விரதங்களில் ஒன்று மகா சிவராத்திரி ஆகும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி என்று மகாசிவராத்திரி விழா உலகம் முழுவதும் இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது…
அம்பிகைக்கு உகந்தது நவராத்திரி விரதம் சிவனுக்கு பிடித்தது சிவராத்திரி விரதம் இரண்டுமே இரவோடு தொடர்புடைய விரத வழிபாடு நாளாகும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இழப்பாகத்தில் அமர்ந்திருக்கும் அம்பிகையும் அருள் புரிகிறாள் சிவன் லிங்கத்தில் எழுந்தருளி அருள் புரிகின்ற நாளை சிவராத்திரி பிரம்மனும் நாராயணம் சிவனது அடி முடிகளை தேடினார் அவர்கள் இருவருக்கும் எட்டாமல் அண்ணாமலையார் அருள்ஜோதியாக ஒளிவீசிய நாளும் இது..
அரியும் யானும் முன் தொடும் அவ்வன்னகிரி அலை… கிரியெனும் படிகின்றதால் அவ்வொலி கிளர்ந்த இரவே சிவராத்திரி ஆனது என்று கந்தபுராணத்தில் பிரம்மா கூறுகிறார் தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து அகால விஷம் தோன்றியது அந்த நஞ்சினை பெருமான் உண்டு உலகை காத்து அருளினார். சதுர்த்தி அன்று தேவர்கள் சிவனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர் அந்த நாளை சிவராத்திரி ஒரு காலத்தில் உலகம் அழிந்து யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கியது அந்த காலம் சூழ்ந்த அந்த இருளில் பார்வதி தேவி சிவபெருமானை அகமங்களில் கூறியுள்ளபடி நான்கு காலம் வழிபட்டால் அவ்வாறு அவளால் வழிபட்டதன் நினைவாக தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நோக்கி வழிபடும் போது இந்நாளில் நான் எவ்வாறு வழிபட்டேனோ அப்படியே வழிபடுபவருக்கு இப் பிறவியில் செல்வம் மறுபிறவியில் சொர்க்கம் இறுதியில் மோட்சமும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் பரமசிவனம் அப்படியே ஆகட்டும் என்று அருள் பாலித்தார் அதன்படியே அன்று முதல் சிவராத்திரி சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது..
மகா சிவராத்திரி என்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும் சிவலோக வாசம் தீட்டும் காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும் சகல செல்வங்களும் நிறைந்த மங்கள வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்படுகிறது..!!