
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழிக்க முடியாதவர்கள் இதை மட்டும் செய்ங்க போதும்..!! சிவனின் அருள் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும்..!!
சிவராத்திரி அன்று சிவனை வழிபடுபவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவனை வழிபடுவார்கள். இந்த நிலையில் மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் சிவனின் அருள் முழுமையாக கிடைக்க என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இந்த வருடத்தில் அதாவது 2025 வருடத்தில் மகா சிவராத்திரி பிப்ரவரி 26ம் தேதி அன்று வருகிறது. பிப்ரவரி 26ம் தேதி அன்று குளித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து பின்பு சிறிது வில்வ இலை படைத்து சிவனை மனதார வழிபட வேண்டும். வீட்டின் பூஜை அறையில் அமைதியாக அமர்ந்து, சிவ சிவா என்றோ அல்லது ஓம் நமசிவாய என்றோ வாய்விட்டு சொல்ல வேண்டும். ஒரு மணி நேரம் அமைதியாக அமர்ந்து இந்த பத்திரத்தை வாய்விட்டு சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை சொல்லும்பொழுது யாரிடமும் பேசக்கூடாது அமைதியாக ஒரே இடத்தில் அமர்ந்து தான் இதை மந்திரத்தை சொல்ல வேண்டும். இவ்வாறு செய்து சிவனுடைய அருளை அனைவரும் பெறுங்கள்.