
- இதில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவு. மேலும் சோடியம் அளவும் குறைவு. மேலும் இதில் இருக்கும் பொட்டாஷியம் சீராக ரத்த அழுத்தத்தை வைத்துக்கொள்ள உதவுகிறது.
சீத்தாப்பழம் சில மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்நிலையில் இதில் இனிப்பு சுவை மட்டும் இல்லை. இது மலச்சிக்கலை குணப்படுத்தும். இதய ஆரோக்கியம், ஆரோக்கியமான சருமம் ஆகியவை கிடைக்க உதவுகிறது.
100 கிராம் சீத்தாப்பழத்தில் என்ன சத்துகள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள்: 98.94
கார்போஹைட்ரேட்: 20.38 கிராம்
நார்சத்து: 5.1 கிராம்
புரத சத்து: 1.62 கிராம்
கொழுப்பு சத்து: 0.67 கிராம்
வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டஷியம், மெக்னிசியம், இரும்பு சத்து உள்ளது.
சீத்தாப்பழத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட் வைட்டமின் சி மற்றும் பைட்டோ கெமிக்கல்ஸ் இருப்பதால் உடலை சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. இதனால் மோசமான நோய் ஏற்படாது.
மேலும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய் தொற்றுக்கள் மற்று நோய்கள் வராமல் தடுக்கும்.
இதில் இருக்கும் நார்சத்து, ஜீரணத்தை அதிகப்படுத்துகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது. குடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
இதில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவு. மேலும் சோடியம் அளவும் குறைவு. மேலும் இதில் இருக்கும் பொட்டாஷியம் சீராக ரத்த அழுத்தத்தை வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இதய ரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும்.
இந்நிலையில் இதில் அசிட்டோஜெனின்ஸ் இருப்பதால், வீக்கத்திற்கு எதிராக வேலை செய்கிறது.
இந்நிலையில் இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது. குறிப்பாக கொலஜன் சுரப்பதற்கு உதவுகிறது.
இந்நிலையில் இதில் இருக்கும் சர்க்கரை இயற்கையானது என்றாலும், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த கலோரிகளை நாம் கணக்கிட்டு, நாம் இதை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.
வெறும் வயிற்றில் இப்பழத்தை எடுத்துகொள்ள வேண்டாம். நாம் சாப்பிடும் காலை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம். காலையில் மட்டும் என்பது கட்டாயம் இல்லை. எல்லா வேளைகளும் உணவுடன் எடுத்துகொள்ளலாம்.