
சீமா ஹைதர் பாகிஸ்தான் வரவில்லை என்றால் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்த தீவிரவாத அமைப்புகள்.
பப்ஜி என்னும் ஆன்லைன் விளையாட்டுச் செயலி மூலம் இந்தியாவின் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவரை காதலித்த பாகிஸ்தானிய பெண் சீமா சட்டத்திற்கு புறம்பாக எல்லை தாண்டி இந்தியாவிற்கு நுழைந்துள்ளார். பின்னர் தனது பப்ஜி காதலனை நேபாளத்தில் திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சீமா, பப்ஜி காதலன் மற்றும் சீமாவின் நான்கு குழந்தைகளையும் கைது செய்து பின்னர் விடுதலையும் செய்துள்ளனர்.
இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை என்றும் இந்தியாவில் தான் இருக்கப் போவதாகவும் இந்தியாவில் தனக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அவர்களுக்கு சீமா ஹைதர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் உத்திரபிரதேசத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. சீமா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் 26/11 இல் நடந்த தாக்குதலைப் போன்று மீண்டும் ஒரு தாக்குதலை மும்பையில் எதிர்பார்க்கலாம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.