தமிழகத்தில் நேற்று செப்டம்பர் 1 சுங்கச்சாவடியில் வாகனத்தின் கட்டணங்கள் உயர்ந்ததை கண்டித்து பலரும் எதிர்ப்பு தந்து வந்த நிலையில் ஆமினி ஓட்டுநர்கள் தங்களது கட்டணத்தை உயர்த்துவதாக இல்லை என்று கூறியுள்ளனர்..
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 34 சுங்கச்சாவடிகளில் சுங்கவரி கட்டணம் உயர்ந்த நிலையில் தற்பொழுது நேற்று செப்டம்பர் 1 மீதமுள்ள 25 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயரப்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் எதிர்ப்பு தந்து வந்த நிலையில் ஆமினி ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கம் தங்களது கோரிக்கை ஒன்றை வெளிவிட்டுள்ளது, அந்தக் கோரிக்கையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் ஆம்னிகள் கட்டணம் உயரப் போவதில்லை என்றும் தூரப் பயணங்களுக்கு செல்லும் பொழுது சுங்க சாவடிகளுக்காக ஆமினியில் பயணிப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தகுந்த கட்டணங்களை மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் ஆமினி ஓட்டுனர் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது, மேலும் இந்த அறிவிப்பினை மக்கள் வரவேற்று இணையதள பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..!!