Oplus_131072
சுடச் சுட ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி….
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் : 500 கிராம்
பெரிய வெங்காயம் : 2 (நறுக்கியது)
தக்காளி : 3 (நறுக்கியது)
தேங்காய் துருவல் : 150 கிராம்
இஞ்சி – பூண்டு விழுது : 1 டீஸ்பூன்
பொட்டுக் கடலை : 1கப்
சோம்பு : 1 டீஸ்பூன்
கசகசா : 1 டீஸ்பூன்
நெய் : 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் : 3
முந்திரி : 10
பட்டை, கிராம்பு, ஏலக்காய் : தாளிக்க
மல்லி மற்றும் புதினா இலை : 1 கப்
உப்பு மற்றும் எண்ணெய் : தேவையான அளவு
செய்முறை :
* ஆட்டுக்கால் பாயா செய்யும்போது, இறைச்சியை கூடுதல் அக்கறையுடன் கழுவி, சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
* நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை, தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து, 25 நிமிடம் குக்கரில் வேக வைத்து இறக்கவும்.
* பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், இரண்டு பச்சை மிளகாய், சோம்பு, கசசகா, முந்திரி பருப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து, சூடானதும் தாளிக்க பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்.
* பின், அதோடு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிவக்க வதக்கவும். இஞ்சி – -பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய், புதினா இலை, மல்லி இலை ஆகியவற்றை நன்கு வதக்கவும்.
* அரைத்து வைத்திருக்கும் மசாலாவுடன் உப்பு சேர்த்து கிளறவும். பின், வேக வைத்த ஆட்டுக்காலை இத்துடன் சேர்க்கவும்.
* சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். அதன் மீது சிறிதளவு மல்லி மற்றும் புதினா இலைகளை தூவி விடவும். சுவையான ஆட்டுக்கால் பாயா தயார். இடியாப்பம், ஆப்பம், பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.




