
சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இதுதான். நமது சோர்வை போக்கி சுறுசுறுப்பாக இருக்க டீ அருந்துகிறோம் . அதேபோல் கிராம்பு டீயை குடிப்பதால் சாதாரண டீயை விட உடலுக்கு அதிக நன்மை பயக்கும்.
தேவையான பொருட்கள்:
5 கிராம்பு
ஒரு கப் சூடான நீர்
தயாரிக்கும் முறை:
சூடான நீரில் 5 கிராம்பை போட்டு ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு அதை வடிகட்டி குடியுங்கள் .கிராம்பு மூலிகை தீயின் மூலம் கிடைக்கும். வைட்டமின் சத்துக்கள் வைட்டமின் பி சி டி கே போன்ற சத்துக்கள் கிடைக்கும்.
கிராம்பு டீயின் நன்மைகள்: தலைவலி போக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். இதய நலன் காக்கும். பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். செரிமானம் சிறக்கும் கல்லீரலுக்கு நன்மை கணையம் ஆரோக்கியம் அடையும்.
குறிப்பு: பல்வலி இருப்பவர்கள் இந்த டீயை மிதமான சூட்டில் குடிப்பது நல்லது.