இன்றைய காலகட்டங்களில் பெரும்பாலோனோர் தலைவலி, உடல் வலி மற்றும் காய்ச்சல் என்றால் மருத்துவரை அணுகாமல் வீட்டில் இருந்தபடியே மருந்துகளை உட்கொள்வது வழக்கமாகிவிட்டது, இதனால் பின் விளைவுகள் ஏற்படுவது அவர்கள் அறிவதே இல்லை முடிந்தவரை உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகி மருந்துகளை உட்கொள்வது அவசியம்..
பெரும்பான்மையோர் மருத்துவரை அணுகுவதே இல்லை, தானே சுயமாக மருந்துகளை எடுத்துக்கொண்டு தங்களுக்கு பிரச்சனை தீர்ந்தது போல் நினைத்துக் கொள்கின்றனர் இதற்கு self medicine என்று பெயர், சில நேரங்களில் இந்த தலைவலி, சளி, காய்ச்சல் பெரிய உபாதைகளை உண்டு பண்ணும், மேலும் உடலில் பாதிப்படையும் உறுப்புகளின் பெரிய அறிகுறியாக இவை தோன்றும் இதனை பொருட்படுத்தாமல் தானே மருந்துகளை உட்கொள்வது சரியல்ல தவறு, தங்களுக்கு ஏதேனும் வலி அல்லது உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகி அதற்கு ஏற்ற மருந்துகளை பெற்று உட்கொள்வதனால் உடல் ஆரோக்கியம் அடையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!