தூய்மை இந்தியா 2.0 என்ற திட்டத்தின் கீழ் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று நோயில்லாமல் வாழ நாமே வழி வகுக்கலாம் என்ற கருத்தை மனதில் கொண்டு உலகம் முழுவதும் பல இடங்களில் பலவிரி நிகழ்ச்சிகள் வீடியோவாக புகைப்படமாகவோ வெளி வருகிறது, இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியாவை பற்றியும் சுற்றுப்புறத் தூய்மை பற்றியும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களுடன் இணைந்து திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர்களும் மாணவிகளிடையே பேசி உள்ளார்கள்.
மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் தூய்மையாக இருப்பது பற்றியும் மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்வை ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்தனர்.