சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி..!! ஊட்டி மலர் கண்காட்சி மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு..!!

கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் மலர்கண்காட்சி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு மலர்க கண்காட்சி கடந்த பத்தாம் தேதி தொடங்கி உள்ளது.

தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்களை கொண்டு யானை, புறா, எலி உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனை சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

இந்த ரோஜா கண்காட்சியை கடந்த பத்து நாட்களில் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்றோடு மலர்கண்காட்சி நிறைவு பெற இருந்தது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு ஊட்டி ரோஜா கண்காட்சியை மேலும் மூன்று நாட்கள் நீட்டிப்பதாக தோட்டக்கலை துறையினர்  அறிவித்துள்ளனர்.

அதாவது 22 ஆம் தேதி வரை ஊட்டி ரோஜா கண்காட்சி நடைபெறும் என்றும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தோட்டக்கலை துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

நல்ல செய்தி..!! சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை குறித்த புள்ளி விவரம்..!!

Read Next

#கடலூர்: கலவை இயந்திரத்தில் சிக்கி துண்டான கை..!! அலறித்துடித்த தொழிலாளி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular