• September 24, 2023

சுற்றுலா வந்த இடத்தில் நேர்ந்த சோகம்..!! ராட்சத அலையில் சிக்கிய பெங்களூர் ஐடி ஊழியர்கள்… காவல்துறை விசாரணை.!

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் பெங்களூரில் சார்ந்த இரண்டு பேர் கடல் அலையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூரை சார்ந்த ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 10 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் ராமேஸ்வரம், மதுரை ஆகிய பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு செப்டம்பர் இரண்டாம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர். சனிக்கிழமை இரவு தனியார் விடுதியில் தங்கிய இவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கன்னியாகுமரியில் உள்ள கோவளம் பகுதியில் அமைந்துள்ள சூரிய அஸ்தமன பூங்காவிற்கு அருகே குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது வீசிய ராட்சத  அலையின் பிந்து (வயது 25) மணி (வயது 32) மற்றும் சுரேஷ் (வயது 35) ஆகியோர் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து உடன் வந்தவர்கள் கடலோர பாதுகாப்பு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் நீண்ட நேர தேடுதல் வேட்டையின் பிறகு பிந்து என்ற பெண் மட்டும் மீட்கப்பட்டார்.

சுரேஷ் மற்றும் மணி ஆகியோரின் சடலங்கள் ஒரு மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து இறந்தவர்களின் சடலங்களை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் மீட்கப்பட்ட பெண்ணை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

சென்னையில் பட்ட பகலில் கஞ்சா விற்பனை..!! 3 பேர் கைது.!!

Read Next

உச்சகட்ட கொடூரம்..! வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; ஆட்டோ ஓட்டுனரின் அதிர்ச்சி செயல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular