சுவாரசியங்கள் நிறைந்த வாழ்க்கை கதை..!! கண்டிப்பாக இந்த சுவாரசியங்களை பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

சுவாரசியங்கள்…..!!!!

கிச்சுகிச்சு மூட்டும் போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு…

கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு…

சட்டைக்குள் போட்ட ஐஸ் கட்டி…

பெல்ட் போட்டு இறுக்கி கட்டிய வேட்டி…

மொட்டமாடி தூக்கம் ..

திருப்தியான ஏப்பம்…

கூட்டமான பஸ்ல , நா அடுத்த நிறுத்தத்தில் எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை…

நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும் குழந்தை..

7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி..

பாட்டியிடம் பம்மும் தாத்தா …

அதீத வெயிலுக்குப் பின் குடிக்கும் ஃப்ரிட்ஜ் வாட்டர்…

நோட்புக்கின் கடைசிப்பக்கம்…

கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத மேக்கப் இல்லா

அழகி …

பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் …

தூங்க தோள் கொடுத்த சக பயணி ….

எரிந்து முடிந்த கம்ப்யூட்டர் சாம்பிராணி ..

பாய் வீட்டு பிரியாணி ..

பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்..

இப்பவும் டேய் என அழைக்கும் தோழி ..

இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா …

கோபம் மறந்த அப்பா..

சட்டையை ஆட்டய போடும் தம்பி..

அக்கறை காட்டும் அண்ணன்..

அதட்டும் அக்கா …

மாட்டி விடாத தங்கை ..

சமையல் பழகும் மனைவி …

சேலைக்கு ப்ளீட்ஸ் எடுத்துவிடும் கணவன்..

இதுவரை பார்த்திராத பேப்பர் போடும் சிறுவன்..

ஹார்ன் அடித்து எழுப்பிவிடும் பால்காரர்…

வழிவிடும் ஆட்டோ காரர்…

ஹை பீம் போடாத லாரி டிரைவர் …

ஊசி போடாத டாக்டர் ..

சில்லறை கேட்காத கண்டக்டர் ..

சிரிக்கும் போலீஸ் …

முறைக்கும் காதலி..

உப்பு தொட்ட மாங்கா..

அரை மூடி தேங்கா..

12மணி குல்பி..

Atm a c ..

சண்டே சாலை …

மரத்தடி அரட்டை…

தூங்க விடாத குறட்டை…

மழை நேர மண் வாசம்..

மார்கழி மாசம்..

ஜன்னல் இருக்கை..

தும்மும் குழந்தை..

கோவில் தெப்பகுளம்..

பொருட்காட்சி அப்பளம்..

முறைப்பெண்ணின் சீராட்டு …

எதிரியின் பாராட்டு..

தோசைக்கல் சத்தம் ..

எதிர்பாராத முத்தம் …

பிஞ்சு பாதம்..

இதை எழுதும் நான்..

படிக்கும் நீங்கள்..

இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..

வாழ்க்கைய வெறுக்க ஹை ஹீல்ஸ் அளவுக்கு பெருசா 10 காரணம் இருந்தாலும்

அதை ரசிக்க , மினி மீல்ஸ் மாதிரி வெரைட்டியான விஷயங்கள் நிறைய இருக்கு ..

அதையெல்லாம் வாட்டர் டேங்க் அளவுக்கு வாய திறந்து ரசிக்கணும்னு இல்ல …

வாட்டர் பாக்கெட் அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்….

கவலை காலி ஆயிரும்

வாழ்க்கை ஜாலி ஆயிரும்

முகம் ஃப்ரெஷ் ஆயிரும்

…அதனால…

வாங்க … வாங்க..

வாழ்க்கையை ரசிங்க .

 

Read Previous

மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பதில் சிரமமா?.. இதோ எளிய டிப்ஸ்கள்..!!

Read Next

திருமணம் முடிந்த பின் முதல் இரவில் பால் மற்றும் பழம் எதற்கு கொடுக்கிறார்கள் என்று தெரியுமா..? படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular