
சுவையான ஆட்டு தலை குழம்பு செய்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்…
பிரசவித்த தாய்மார்கள் 11 மாதத்தில் தனது குழந்தை தலை ஆடுவது நிறுத்த வேண்டும் என்பதற்காக ஆட்டு தலையை குழம்பு வைத்து சாப்பிடுவார்கள், அதேபோல் பலரும் ஆட்டுத்தலை குழம்பு ஆட்டுத்தலை வருவலை விரும்பி சாப்பிடுபார்கள், ஆட்டு தலை குழம்பு செய்வதற்கான தேவையான பொருட்கள், முதலில் ஆட்டுத்தலை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் எண்ணெய் தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். பட்டை இரண்டு கிராம் 2 வெங்காயம் 5, இஞ்சி பூண்டு விழுது 4 ஸ்பூன், கொத்தமல்லி இரண்டு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் 4, மிளகாய் தூள் 2 டேபிள்ஸ்பூன், தனியா தூள் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப தக்காளி 4, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், தேங்காய் அரை மூடி, அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும், ஏலம் 2, செய்முறை : ஆட்டுத்தலை சுத்தம் செய்து வாங்கி வரவும் அதில் நிறைய நொறுக்கி எலும்பு இருக்கும் என்பதனால் அதனை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும், அதில் உள்ள நாக்கை தனியாக எடுத்து அதை கொதிக்க வெந்நீரில் போட்டு தோலை பிரித்தெடுக்க வேண்டும், ஆட்டுத்தலை நன்கு கழுவி எடுத்து அதில் உப்பு மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு குக்கரில் வேக வைக்கவும், தனியாக என்னை ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலம் கிராம்பு போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் தூள் ஆகிய அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கவும், பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு கிளறவும் தீயை ஐந்து நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும் கடைசியில் தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிட்டு வந்ததும் இறக்கவும் இது உடம்புக்கு ரொம்ப நல்லது என்பதனால் ஆட்டு தலைக்கறியை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்..!!