
- உருளைக்கிழங்கு சப்ஜி
தேவையானவை :
உருளைக்கிழங்கு — 2 (வேகவைத்து தோலுரித்து பொடித்தது)
தக்காளி — 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் — 2 (பொடியாக நறுக்கியது)
சீரகம் — 1/2 டீஸ்பூன்
சோம்பு — 1/2 டீஸ்பூன்
பட்டை — 1/2 அங்குலம்
பச்சை மிளகாய் — 2 (பொடியாக நறுக்கியது)
எண்ணைய் — 6 ஸ்பூன்
கிராம்பு — 3 என்னம்
இஞ்சி, பூண்டு விழுது — 1 ஸ்பூன்
தனியா தூள் — 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் — 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் — 3 சிட்டிகை
கடுகு, உளுத்தம்பருப்பு — 1 டீஸ்பூன்
உப்பு –ருசிக்கேற்ப
செய்முறை :
1.முதலில் கடாயை காய வைத்து மூன்று ஸ்பூன் எண்ணைய் விட்டு சூடானதும் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து பட்டை,கிராம்பு போட்டு சீரகம், சோம்பு சேர்த்து வெடித்தபின் இஞ்சி,பூண்டு கலவை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
2.பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தக்காளி சேர்த்து தக்காளி வதங்கும் வரை வதக்கவும்.இதனுடன் சிவப்பு மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாதூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.அரை கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் உருளைக் கிழங்கு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை சமைக்கவும். மீதியுள்ள எண்ணையை சேர்க்கவும்.
சுவையான உருளைகிழங்கு சப்ஜி ரெடி.