சுவையான கேரளா ஸ்டைல் முட்டை பிரட்டல் செய்வது எப்படி..?

கேரளா ஸ்டைலில் முட்டை பிரட்டல் செய்யும் முறை குறித்து இப்பதிவில் காணலாம்.

தேவையான பொருள்கள்

  • முட்டை -4
  • தேங்காய் எண்ணெய் -3 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம்- கால் தேக்கரண்டி
  • வெங்காயம் -1
  • தக்காளி- 1
  • மல்லித்தூள் -அரை தேக்கரண்டி
  • கருவேப்பிலை- ஒரு கொத்து,
  • மஞ்சள் தூள்- சிறிதளவு
  • இஞ்சி, பூண்டு விழுது- கால் தேக்கரண்டி
  • உப்பு- சிறிதளவு
  • சீரகத்தூள்- கால் தேக்கரண்டி
  • கரம் மசாலா- கால் தேக்கரண்டி
  • தனி மிளகாய் தூள்-கால் தேக்கரண்டி
  • மிளகுத்தூள்- அரை தேக்கரண்டி
  • மல்லித்தழை- சிறிதளவு
  • கருவேப்பிலை கொத்து- 1

செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் நான்கு முட்டைகளை சேர்த்து அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிட்டு அடுப்பை அணைக்கவும், பின் முட்டை ஓடுகளை நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்த அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். மஞ்சள் சிறிதளவு சேர்த்து கலக்கி கொள்ளவும். அடுத்து இரண்டாக நறுக்கி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து மிதமான தீயில் மெதுவாக கிளறி விடவும் .

மஞ்சள் மற்றும் உப்பு கலவை முட்டையின் மீது இறங்கியதும் முட்டையை ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அடுத்து முட்டை வதக்கியை எண்ணெயில் கால் தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து கிளறி விடவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளி ஒன்றை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும் அடுத்து கால் தேக்கரண்டி சீரகத்தூள், கால் தேக்கரண்டி கரம் மசாலா, கால் தேக்கரண்டி தனி மிளகாய் தூள் மற்றும் அரை தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து நான்கு வதக்கிக் கொள்ளவும்.

பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மசாலா கலவையை கொதிக்க விடவும். அடுத்து ஒதுக்கி வைத்துள்ள முட்டையை சேர்த்து ஒரு கிளறு கிளறி சில நிமிடங்களில் மூடி போட்டு வேக விடவு.ம் பின்னர் அடுப்பை அணைத்து சிறிதளவு கருவேப்பிலை மற்றும் வாசனைக்காக மல்லி தழை சேர்த்து கிளறவும். இவ்வாறு செய்தால் முட்டை பிரட்டல் மிகவும் சுவையாக இருக்கும்.

Read Previous

அடித்து போட்டது போல் உடம்பு வலியால் அவதிப்படுகிறீர்களா..? அப்போ இதுதான் தீர்வு..!!

Read Next

அச்சச்சோ.. தினமும் சிக்கன் சாப்பிடும் பழக்கம் கொண்டவரா நீங்கள்..? இந்த பதிவு உங்களுக்குத்தான்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular