உடலுக்கு மிகவும் சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்தமான கோதுமை வெல்ல தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- வெல்லம்
- தேங்காய் துருவல்
- உப்பு
- நெய் ஏலக்காய் தூள்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, உப்பு, துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் ஆகியவற்றை நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் வெல்லப்பாகை கலந்து வைத்துள்ள கோதுமை மாவில் ஊற்றி நன்கு கட்டி இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதை ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்து வைத்துள்ள இந்த கோதுமை மாவு கரைசலை தோசை ஊற்றி நெய்விட்டு இருபுறமும் நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த கோதுமை தோசை தயார்.