
- சிவப்பு வெல்வெட் கேக் செய்முறை
தேவையான பொருட்கள் :
* மைதா மாவு2 கப்
* சர்க்கரை2 கப்
* எண்ணெய்2 கப்
* சோடா உப்பு1 ஸ்பு+ன்
* பேக்கிங் பவுடர் 2 டீஸ்பு+ன்
* முட்டை4
* வெள்ளை வினிகர் 2 ஸ்பு+ன்
* வெனிலா எஸென்ஸ்2 ஸ்பு+ன்கெட்டியான மோர் 2 கப்
* சிவப்பு ஃபுட் கலர் 3 ஸ்பு+ன்
* க்ரீம் சீஸ்தேவையான அளவு
செய்முறை :
சிவப்பு வெல்வெட் கேக் செய்வதற்கு மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் சோடா உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இரண்டு முறை சலித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய், முட்டை, வினிகர், சர்க்கரை மற்றும் எஸென்ஸ் ஆகிய அனைத்தையும் ஒன்றாகக் கலந்து நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும்.
பிறகு அதனுடன் சிவப்பு ஃபுட் கலரையும் சேர்த்து அடிக்கவும். பிறகு சலித்து வைத்துள்ள கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கி, அதனுடன் மோரையும் சேர்த்துக் கலக்கவும்.
பின்னர் இந்தக் கலவையை கேக் பாத்திரத்தில் கொட்டி பேக் செய்யவும். கேக் கலவையை இரண்டாகப் பிரித்து ஒரே அளவிலான இரண்டு தனித்தனிக் கேக்குகளாகவும் பேக் செய்யவும்.
பிறகு பேக் ஆன இரண்டு கேக்குகளின் நடுவே க்ரீம் சீஸ்ஃபில்லிங்கை தூவிவிட்டு ஒரே கேக்காக செட் செய்யவும். கலர்புல்லான, சுவையான சிவப்பு வெல்வெட் கேக் ரெடி.