சுவையான டேஸ்டான சிக்கன் சூப் இப்படி செஞ்சு அசத்துங்க..!! அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!

சூப் அதாவது சிக்கன் சூப் என்றால் யாருக்குதான் பிடிக்காது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சூப் சிக்கன் சூப். சளி காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் அளிக்கும் ஒரு மருந்து தான் சூப் சிக்கன் சூப். இந்த சிக்கன் சூப் எல்லாரும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி செய்வது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் – நான்கு துண்டு எலும்புடன்

மிளகு தூள் – அரை ஸ்பூன்

தனியா தூள் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் -ஒரு ஸ்பூன்

வெங்காயம் – ஒன்று

தக்காளி – ஒன்று

கொத்தமல்லி தழை – சிறிதளவு

நெய் – ஒரு ஸ்பூன்

கரம் மாசாலா தூள் – கால் ஸ்பூன்

செய்முறை:
சிக்கனை கழுவி அதில் மேலே குறிப்பிட்டுள்ள மசாலாக்களை போட்டு வெங்காயம் பொடியாக நறுக்கி போடவும், தக்காளியை நல்ல பிழிந்து விடவும். மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் நல்ல ஆறு விசில் விட்டு இறக்கவும்.வெந்ததும் வடிக்கட்டி அதை சூடான சாதத்தில் பிசைந்து கொடுக்கவும். இல்லை உங்கள் குழந்தை குடித்தால் அப்படியே குடிக்க கொடுங்கள்.

Read Previous

நரி கற்றுக் கொடுத்த பாடம்..!! சிங்கமாக இருக்க வேண்டுமா.. நரியாக இருக்க வேண்டுமா.. என்று நீங்களே பதிவைப் படித்து முடிவு செய்து கொள்ளுங்கள்..!!

Read Next

எத்தனை தலைமுறையை காக்கும் புண்ணிய பலன்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular