
சிறுவர் முதல் பெரியவர் வரை ருசித்து ரசித்து சாப்பிடும் ஓர் இனிப்பு தான் பால்பன். குறிப்பாக திண்டுக்கல் வாசிகளின் ஃபேவரைட் இனிப்பாக பால் பன் திகழ்கிறது. அதனை எப்படி வீட்டிலேயே செஞ்சு சாப்பிடலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் முக்கால் கப் சர்க்கரையை அரைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, மைதா மாவு (1 கப்), ஏலக்காய் தூள், தயிர் (1/4 கப்), ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, உப்பு மற்றும் நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மாவை சிறு சிறு உருண்டைகளாக மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். எண்ணெய் வடிந்த பிறகு, அதை சர்க்கரைப்பாகில் தோய்த்து எடுத்தால் சுவையான பால்பன் தயார்.