
- தேன் மிட்டாய் செய்முறை
தேவையான பொருட்கள் :
* உளுத்தம் பருப்பு2 கப்
* மைதா மாவு அரை கப்
* அரிசி மாவுஅரை கப்
* சர்க்கரை ஒன்றரை கப்
* எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
உளுந்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். பின் அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, மைதா மாவு, அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு கொதிக்க வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொரிந்து வந்த உடன் எடுத்து எண்ணெயை வடித்து விட்டு சூடான சர்க்கரைப்பாகில் போட்டு அரை மணிநேரம் கழித்து தனியாக எடுத்து தட்டில் வைக்க வேண்டும். இப்போது சுவையான இனிப்பான தேன் மிட்டாய் தயார்.