• September 12, 2024

சுவையான நண்டு குழம்பு செய்வது எப்படி தெரியுமா?.. செய்முறை உள்ளே..!!

நீங்கள் எளிதாக நண்டு வறுவல் செய்யலாம்.இனி நீங்கள் ஓட்டல் போக தேவை இல்லை. உங்கள் வீட்டிலேயே சமைத்து சுவையாக உண்ணலாம்.

நண்டு வறுவல் (Crab Curry) செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

நண்டு வறுவல் செய்ய தேவையானவை:

நண்டுகள்(மீடியமானது) – 6

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 1

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

அரைக்க தேவையானவை :

இஞ்சி – சிறுதுண்டு,

சின்ன வெங்காயம் – 10 ,

காய்ந்த மிளகாய் – 10 ,

சீரகம் – 1 டீஸ்பூன்,

பூண்டு பல்- 5 ,

தனியா – 2 டீஸ்பூன்

செய்முறை:

* ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் நீர் ஊற்றி தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் ஆகியவை சேர்க்கவும்.

* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், நண்டுகளைப் போடவும். மெல்லிய தீயில் சிறிது நேரம் அப்டியே வைக்கவும். நண்டுகள் வெந்து, மசாலா கலவையுடன் சேர்ந்து கெட்டியானதும் இறக்கிப் விடவும். இப்போது சுவையான நண்டு வறுவல் ரெடி.

Read Previous

த.வெ.க தலைவர் விஜய்யின் அடுத்த அதிரடி..!! வெளியான முக்கிய தகவல்..!!

Read Next

விரைவில் கருத்தரிக்க விரும்பினால் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular