சுவையான நாட்டுக்கோழி நம் வீட்டில் வேகும் பொழுது பக்கத்து வீட்டுக்கு வாசனை சென்று வாயில் எச்சி ஊற வைக்கும்..
நாட்டுக்கோழி குழம்பு செய்ய தேவையான பொருட்கள் நாட்டுக்கோழி 1/2 kg சின்ன வெங்காயம் 15 தக்காளி மூணு தேங்காய் ஒரு கப்பு மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மசாலாத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் நாலு டேபிள் ஸ்பூன் சோம்பு ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய் ரெண்டு, கருவேப்பிலை ஒரு கொத்து, கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி, எண்ணெய் தேவைக்கேற்ப, உப்பும் தேவைக்கேற்ப, செய்முறை சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் பின்பு தக்காளியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும், வாணலியில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் அதனுடன் பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதக்கியதும் அதனுடைய மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும், வதக்கிய பின்பு அவற்றை ஆற வைத்து மிக்ஸியில் மசாலாவாக அரைத்து கொள்ள வேண்டும், பின்பு நாட்டு கோழியை நன்றாக கழுவி சிறிய துண்டாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும், குக்கரில் நாலு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பின்பு குழம்பு மசாலா சேர்க்க வேண்டும், நன்கு வதங்கிய பின்பு மஞ்சள் தூள் மற்றும் சிறிய துண்டாக வெட்டி வைத்த நாட்டு கோழியை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் சிறிது நேரம் விசில் போடாமல் மூடி வைக்க வேண்டும், ஐந்து நிமிடம் கழித்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை அதனுடன் சேர்த்து கிளறவும் பின்பு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு விசில் விடவும்,நாட்டுக்கோழி என்பதால் ஐந்து விசில் வரை விடலாம். அப்பொழுதுதான் நன்றாக வெந்து சாப்பிட சுவையாக இருக்கும், விசில் இறங்கின பிறகு கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும் காரசாரமான நாட்டுக்கோழி குழம்பு தயார், மேலும் இதுடன் சாப்பிட உகந்த உணவுகள் சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம் பிரியாணிக்கு ஏற்ற சைடிஸ் ஆகும்..!!




