
- புளி மிளகாய்
தேவையான பொருட்கள் :
பச்சை மிளகாய் – 20
புளி – ஒரு டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
நருக்கிய கொத்தமல்லி – ஒரு கப்
துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1.மிக்ஸ்சியில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளி, உப்பு, இஞ்சி ஆகியவற்றுடன் ஒரு டேபிள் ஸ்பூன் நீர் விட்டு கெட்டியாக மையாக அரைக்க வேண்டும்.
2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், பெருங்காயம், மஞ்சள் தூள் தாளிக்க வேண்டும். அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் வைத்து எண்ணெய் கக்கும் வரை நன்கு கிளறவும். சுவையான புளி மிளகாய் தயாராகி விட்டது. இதை ஒரு காற்று புகாத ஜாடியில் போட வேண்டும்.