
- சுவையான முட்டைக்கோஸ் வடை வீட்டில் செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் குழந்தைகள் இருந்தால் முட்டைக்கோஸ் சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள். ஆனால் அதையே நீங்கள் மொறு மொறுப்பான வடையாக செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – 1.5 கப்,
முட்டைக்கோஸ் – 2 கப் (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது), இஞ்சி – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை தேவையான அளவு,
உப்பு தேவையான அளவு,
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பினை ௨ மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனை வடை பதத்திற்கு அரைத்து கொள்ளவும். அதிகமான தண்ணீர் சேர்த்து அரைக்க கூடாது. வடைக்கு போதுமானதாக இருக்க வேண்டும். அந்த மாவில் நறுக்கிய முட்டைக்கோஸ் பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து வடைக்கு ஏற்றாற்போல் பிசைந்து கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் வடை மாவை எடுத்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறம் வந்தவுடன் எடுக்க வேண்டும். சுவையான மொறுமொறுப்பான முட்டைக்கோஸ் வடை ரெடியாகி விட்டது.