
- வான் கோழி பிரியாணி செய்முறை
தேவையான பொருட்கள் :
* வான்கோழி கறி 1 கிலோ
* வெங்காயம் 3
* தக்காளி 3
* பச்சை மிளகாய்5
* புதினா 2 கைப்பிடி அளவு
* கொத்தமல்லி2 கைப்பிடி அளவு
* நெய்5 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை 1 கொத்து
* ஏலக்காய் 7
* கிராம்பு 7
* இஞ்சி பூண்டு விழுது6 டீஸ்பூன்
* தயிர்1 கப்
* மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
* கரம் மசாலா 3 டேபிள் ஸ்பூன்
* மிளகு தூள்3 டீஸ்பூன்
* சோம்பு தூள்1 டீஸ்பூன்
* பிரிஞ்சி இலை3
* பாசுமதி அரிசிமுக்கால் கிலோ
* உப்புதேவைக்கேற்ப
* முந்திரி பருப்பு5
* உலர் திராட்சை5
* பாதாம் பருப்பு 5
* கசகசா3 டீஸ்பூன்
* தேங்காய் பால் 1 கப்
செய்முறை :
அரிசியை உப்பு போட்டு வேக வைத்து அரைவேக்காடாக வடித்து கொள்ளவும். நெய்யில் திராட்சை, முந்திரிப்பருப்பை வறுத்து வைக்கவும். பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் உரித்து கசகசவோடு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
கறியில் மஞ்சள் தூள், மிளகு தூள், சோம்பு தூள், உப்பு, தயிர், கரம் மசாலா, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினாவை சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, ஏலக்காய், கிராம்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பிரிஞ்சி இலை, சிறிது கொத்தமல்லி, புதினா, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தயிர் சேர்த்து தாளிக்கவும். பின் கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். இப்போது மசாலா போட்டு பிரட்டி ஊற வைத்துள்ள கறியை சேர்த்து நன்றாக பிரட்டவும்.
மசாலா கறியினுள் சேர்ந்த பின் அரைத்த பாதாம் விழுது, தேங்காய் பால், சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி பின் தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 20 நிமிடங்கள் வேக விடவும்.
பிறகு கறி வெந்ததும் கறியை தனியே எடுத்து அதே குக்கரில் சாதம் அதன் மேல் கறியின் கிரேவி மீண்டும் சாதம், கிரேவி சேர்த்து அடுக்காக போட்டு அதன் மேல் கொத்தமல்லி தூவி பின் வறுத்த முந்திரி, உலர்ந்த திரட்சை சேர்த்து தூவி குக்கரை மூடி 15 நிமிடம் தம்மில் போடவும். இப்போது சுவையான வான் கோழி பிரியாணி தயார்.