
- வாழைத்தண்டு மோர்க் கூட்டு செய்முறை
தேவையான பொருட்கள்:
* வாழைத்தண்டு ஒரு துண்டு
* தயிர் 1 கப்
* பச்சை மிளகாய்2
* தேங்காய் துருவல் ஒரு கப்
* கடுகு அரை டீஸ்பூன்
* உளுத்தம் பருப்புஅரை டீஸ்பூன்
* எண்ணெய் தேவைக்கேற்ப
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, நார் நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக விடவும்.
தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து, வாழைத்தண்டுடன் சேர்க்கவும். சிறிது வெந்ததும் தயிர் விட்டு நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கூட்டுடன் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இப்போது சுவையான வாழைத்தண்டு மோர்க்கூட்டு தயாராகி விட்டது.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம்.