சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை..!!
தேவையான பொருட்கள்:
1 கப் சாமை அரிசி
1/4 கப் பயத்தம் பருப்பு அல்லது பாசி பருப்பு
1/4 கப் தேங்காய் துருவல்
4 பச்சை மிளகாய்
ஒரு துண்டு இஞ்சி
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 ஸ்பூன் கடலை பருப்பு
1 டேபிள்ஸ்பூன் நெய்
1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
தேவைக்குபெரும்காயதூள், கருவேப்பிலை, உப்பு
செய்முறை விளக்கம்:
முதலில் சாமை அரிசியை 2,3 வாட்டி நன்கு கழுகி, பிறகு நல்ல தண்ணீரில் 1-2 மணி நேரம் ஊற விடவும்
தேவையான வற்றை எடுத்து வைத்துக்கவும். பாசி பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற விட்டு உதிரியாக வேக விட்டு எடுத்துக்கவும்
ஸ்டவ்வில் வாணலி வைத்து நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு வறுத்துக்கவும்
அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
அதில் 2- 1/2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் பாசி பருப்பு சேர்க்கவும்
அத்துடன் தேங்காய் துருவல், பெருங்காயதூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
தண்ணி நன்கு கொதித்ததும் அத்துடன் ஊற வைத்திருக்கும் சாமை அரிசி சேர்த்து நன்கு கலந்து சிம்மில் 10 – 15 நிமிடம் மூடி வைத்து வேக விடடு எடுத்து வேறொரு தட்டில் ஆற விடவும்
கை பொறுக்கிற சூட்டில் கையில் கொஞ்சம் நெய் தடவி சின்ன சின்ன உருண்டைகளாக அல்லது கொழுக்கட்டைக்காளாக செய்து வைத்துக்கவும்
ஸ்டவ்வில் இட்லி பாத்திரம் வைத்து கொழுக்கட்டைகளை எடுத்து வைத்து 10 – 12 நிமிடம் ஆவியில் வேக விட்டு எடுத்தால் மிக சுவையான சாமை கொழுக்கட்டை தயார்
மிளகாய் கார சட்னியுடன் சேர்த்து தொட்டு சாப்பிட பெஸ்ட் காம்பினேஷன்…. மிக அருமையான ருசியுடன் கூடிய ஆரோகியமான சாமை கொழுக்கட்டையை செய்து பார்த்து சுவைக்கவும்..




