
சூடானில் ஏவுகணை தாக்குதல் – 16 பேர் உயிரிழப்பு.
ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டில் சென்ற 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் நாள் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும், இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவத்தால் இதுவரைக்கும் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், சூடான் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்து குறித்து சூடான் ராணுவம் முகநூலில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அந்த செய்தி குறிப்பில், “ஆன்டனோவ் பயணிகள் விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறினால் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நான்கு ராணுவ அதிகாரிகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர் 100 வது நாளை எட்டியுள்ள நிலையில், நேற்று தர்பர் பகுதியில் நடந்த ஏவுகணை தாக்குதலில் பதினாறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போரினால் ஆயிரக்கணக்கான குடிமக்கள் எல்லையை கடந்து வேறு பகுதிகளுக்கு தப்பி ஓடுகின்றனர்.