சூடு பிடிக்கும் இந்திய தேர்தல் களம்..!! மும்பையில் பிரதமர் மோடி இன்று வாகன பேரணி..!!

நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட வாக்கு பதிவுகள் நடைபெற்ற நிலையில் வருகின்ற 20-ஆம் தேதி மும்பையில் உள்ள ஆறு தொகுதிகள் உட்பட 13 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மகாராஷ்டிராவில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவு ஐந்தாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவாகும். இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை மும்பையில் வாகன பேரணி நடத்தி பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.

முதலில் திண்டோரி மற்றும் கல்யாணில் நடைபெறும் பொது கூட்டங்களில் பங்கேற்று பேசும் பிரதமர் மோடி பிறகு காட்கோபர், எல் பி எஸ் மார்க் பகுதியில் இருந்து காந்திநகர் வரையில் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகன பேரணி நடத்த உள்ளார். இதற்கிடையே பிரதமர் மோடி நாளை மறுநாள் மும்பையில் நடைபெறும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து உள்ளது.

Read Previous

செங்கோட்டையின் தலைமையில் தான் அதிமுக..!! பரபரப்பை ஏற்படுத்திய திமுக அமைச்சர்..!!

Read Next

தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரனை ஓரம் கட்டும் நரேந்திர மோடி..!! அமமுக-வினர் குமறல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular