• September 11, 2024

சூடு பிடிக்கும் விக்கிரவாண்டி தேர்தல் களம்..!! வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்றைய கடைசி நாள்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல்நலக் குறைவு  காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி உயிர் இழந்தார்.எனவே இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வருகின்ற ஜூலை மாதம் 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்றது இதுவரைக்கும் 56 வேட்பாளர்கள் 64 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தனம் வேட்புமனு பரிசீலணை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா உட்பட 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது, 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேட்பு மனுக்களை வாபஸ் வருவதற்கு இன்றைய கடைசி நாள் ஆகும் எனவே திரும்ப பெற்றுக் கொள்ள விருப்பம் உள்ள வேட்பாளர்கள் இன்று மாலை 3 மணிக்குள் வேட்பமனுவை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 3 மணிக்குள் ஓர் இரண்டு பேர் வேட்பு மனு வாபஸ் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு தேர்தல்கலத்தில் போட்டியிடக் கூடியவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் வெளியான சில மணி நேரங்களில் அந்தந்த வேட்பாளருக்குரிய சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான பழனி, தேர்தல் பொது பார்வையாளர் அமித்சிங் பன்சால், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

இங்கிலாந்து அணிக்கு எதிராக இதே ஆட்டம் தொடரும் – ரோஹித் ஷர்மா..!!

Read Next

தமிழ் திரையுலகில் மீண்டும் ஓர் விவாகரத்தா..? வதந்தியா..? உண்மையா..? குழப்பத்தில் ரசிகர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular