
மகாராஷ்டிரா: துர்ஷெட் கிராமத்தில் சாலையோரத்தில் கிடந்த ஒரு சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசுவதை கவனித்த சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்த போது உள்ளே அழுகிய நிலையில், பெண்ணின் உடல் இருந்தது. உடலானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த பெண் 25 முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என தெரிவித்த போலீசார் அவர் 5 நாட்களுக்கு முன் கொல்லப்பட்டிருக்கலாம் என்றனர்.