
- மில்க் கேக் செய்முறை
தேவையான பொருட்கள் :
* பால் 2 லிட்டர்
* சர்க்கரை 1கப்
* நெய் 1 கப்
* வினிகர் 4 டீஸ்பு+ன்
செய்முறை :
மில்க் கேக் செய்வதற்கு முதலில் கேஸ் ஸ்டவ்வில் பாதியளவு பாலைக் காய்ச்சிக் கொள்ளவும்.
பால் கொதிக்கும்போது, அதில் வினிகரைச் சேர்க்கவும். வினிகரை சேர்த்தவுடனே பால் திரிந்து விடும். திரிந்த பாலை வடிகட்டினால் பனீர் கிடைக்கும்.
பிறகு ஒரு கனமான பாத்திரத்தில் மீதியுள்ள பாலை ஊற்றி, கேஸ் ஸ்டவ்வை சிம்மில் வைத்து காய்ச்சி, அதனுடன் பனீரைச் சேர்த்துப் பாலானது பாதியாகச் சுண்டியதும், அதில் சர்க்கரை, பால் நன்கு கெட்டியாகி, நெய்யானதுப் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும்.
பிறகு, ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் கொட்டிச் சமப்படுத்தி, மற்றொரு தட்டால் நன்கு மூடி, சற்றுச் சாய்வாக வைக்கவும். இப்படிச் செய்வதால் அதிகப்படியாக உள்ள நெய்யானது வடிந்து விடும். பிறகு 3 அல்லது 4 மணி நேரம் ஆறவிடவும். சுவையான மில்க் கேக் ரெடி.