தமிழகத்தில் விசேஷ நாட்களில் பேருந்து வசதிகள் கூடுதலாக இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது, சென்னையிலிருந்தும் கிளம்பாக்கத்தில் இருந்தும் திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, கன்னியாகுமரி, ஈரோட்டுக்கு நாளை வெள்ளிக்கிழமை அன்று 275 பேருந்துகளும் சனிக்கிழமை அன்று 315 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது, மேலும் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, பெங்களூர், நாகை ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும் மற்றும் சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது என தமிழக போக்குவரத்து முற்போக்கு சங்கம் அறிவித்துள்ளது..!!