விஜய் டிவியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் சிங்கர் ஜூனியர் தனது பத்தாவது சீசனுடன் ஒளிபரப்பாக உள்ளது, நவம்பர் 16 2024 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6:30 மணி அளவில் ஒளிபரப்பாகும் 6 முதல் 15 வயது குட்பட்ட குழந்தைகள் தங்களது பாடல் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாக திகழும் சூப்பர் சிங்கர் ஜூனியர், இப்போது பத்தாவது சீசனுடன் மீண்டும் மக்களின் மனதில் கொண்டிருக்கும் உற்சாகத்தை மீண்டும் மெருகூட்ட வருகிறது, முதல்முறையாக இசை மேதை டி. இமான் சீசன் பத்தில் புதிதாக இணைந்து கே எஸ் சித்ரா மற்றும் மனோவுடன் பாடகர்களுக்கு வழிகாட்டும் நடுவர்களில் இணைந்துள்ளார், நிகழ்ச்சியின் மாக்காபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே மீண்டும் தொகுப்பாளர்களாக இணைந்துள்ளார், இதனை முன்னிட்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 தனது புரோமோக்களை வெளியிட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது ஒவ்வொரு ப்ரோமோவும் ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் என்ற வரிகளை உள்ளடக்கியது இதன் மூலம் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..!!




