• September 24, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?..படக்குழு அறிவிப்பு..!!

இந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக நடித்துக் கொண்டு வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலிப் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு,விநாயகன் ,தமன்னா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலரும் நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு அறிவித்துக் கொண்டே உள்ளது. இதன் படி இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரபாண்டமாக நடைபெறும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Read Previous

அமெரிக்காவில் பரிதாபம்..!! அரிய வகை அமீபா நோயால் இரண்டு வயது சிறுவன் பலி..!!

Read Next

நிலத்தரகர்கள் 2 பேர் கைது…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular