ஆதிகாலத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பும் சேவல் கூவுகிறதுக்கு முன்பும் எழுந்திருக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் இன்றைய தலைமுறையில் எழுந்திருப்பது என்பது சூரியன் வந்தும் 9 மணி ஆகிவிடுகிறது, காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்திருப்பது உடலுக்கு அவ்வளவு நல்லது..
தூங்கி எழுந்துடன் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்று அன்றைய நாள் தான் தீர்மானம் செய்கிறது, சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்திருக்க பழக வேண்டும், காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய நடைபயிற்சி ரன்னிங் இவற்றை செய்ய வேண்டும் மேலும் மனதை ஆரோக்கியமாக வைக்க யோகா செய்ய வேண்டும், காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதனால் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராகவும் அதிகரிக்கவும் செய்யலாம், காலை உணவை எட்டு மணிக்குள் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதங்கள் கிடைக்கிறது இதனால் உடல் ஆரோக்கியமாகவும் அன்றைய நாள் முழுக்க புத்துணர்ச்சியாகவும் இருப்பதற்கான வாய்ப்பு அமைகிறது, மேலும் சூரிய உதயத்திற்கு முன்பு எழுவது சுறுப்பு சுறுப்பு தன்மை தருகிறது..!!