சூரி நடிக்கப் போகும் புதிய படத்தில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களமிறங்கி கதாநாயகனாக ஜொலித்து வருபவர் சூரி.சமீபத்தில் இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ராஜ்கிரன், சுவாசிக்கா , பால சரவணன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இந்த நிலையில் சூரி நடிக்கப் போகும் புதிய படத்தை இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்திலும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பிலும் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தக் கூட்டணி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.




