வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா மற்றும் மமிதா பைஜு இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படம், ஒரு குடும்ப பின்னணி கொண்ட கதையாக உருவாகி வரும் நிலையில், வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




