தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் மொத்தம் பத்து மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் சூரியா 44 படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் மற்றும் டீசர் ஆகியவை சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை 23ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.